Home இலங்கைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது – பிரதமர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டத்திற்கு முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாக பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவடையச் செய்யுமாறு எவரும் யோசனைத் திட்டங்களை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன மக்களையும் ஐக்கியப்படுத்தும் நோக்கிலேயே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையளித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், அதனை உருவாக்குவதற்கு போதியளவு கால அவகாசம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More