இந்தியா 40 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய உள்ளது. காலாட்படையை நவீனப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 லட்சம் ரைபில்கள், 44,000 குறைந்த எடையிலான இயந்திர துப்பாக்கிகள் , சுமார் 44,600 கார்பைன் துப்பாக்கிகள் வாங்குவதற்கான விரிவான நடைமுறைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவமாக விளங்குகிற இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லையில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு ஆயுதக் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது