குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இந்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை டர்ன்புல் சந்திக்க உள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். இலங்கைக்கு பயணம் செய்வது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment