குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரும் மாதம் இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்டிப்பதற்கு கிளிநொச்சியில் மாவீரர் நாள் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியை சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதிபிள்ளையின் தலைமையில், கட்சியின் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினா் குமாரசிங்கம் செயலாளராகவும், மற்றும் கட்சியின் பிரதேச மற்றும் கிராம மட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்களாகவும் கொண்டு இப் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(29) கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளையின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.