Home இந்தியாதமிழக எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

தமிழக எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

by admin


தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான மேலாண்மை பொன்னுசாமி இன்று சென்னையில் காலமானார். சுகவீனம் காரணமாக தன்னுடைய 67ஆவது வயதில் மேலாண்மை பொன்னுச்சாமி மறைந்தார்.  தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த பொன்னுசாமி மிக மிகச் சாதாரண மக்களின் வாழ்க்கையை தனது படைப்புகளில் பிரதிபலித்தார்.

‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.  ஏழைக்குடும்பத்தில் பிறந்த பொன்னுச்சாமி இளம் வயதிலேயே குடும்பச் சுமையை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதன் காரணமாக ஆரம்பப் படிப்பைக்கூட தாண்ட முடியாத நிலை ஏற்பட்டது.

பாடசாலைக் கல்வியிலிருந்து விடுபட்டாலும் இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அனுபவங்களும் அவரை தமிழின் தலைசிறந்த எழுத்தாளராக இவரை மாற்றியது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை, மண்வாசனை என்பன கமலும் படைப்புக்களை தந்துள்ளார்.  உயிர்நிலம் உள்ளிட்ட நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் என புனைகதை இலக்கியம் சார்ந்து 36 நூல்களை எழுதிய இவர் எழுதியுள்ளார்.
மனப் பூ தொகுப்புக்காக தமிழக அரசின் இலக்கிய விருதையும் வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் “மாட்சிமைப் பரிசு” என்ற கேடயத்தையும் உயிர்க் காற்று தொகுப்புக்காக பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது  உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் மேலாண்மை பொன்னுச்சாமி பெற்றுள்ளார்.  அவரது இறுதி அஞ்சலி நாளை காலை சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More