169
இராஜராஜேஸ்வரம் எனப்படும் தஞ்சைப் பெருங் கோயிலை கட்டிய தமிழக மன்னன் இராஜராஜ சோழனின் 1032வது சதய விழா தஞ்சாவூரில் கோலகலமாகக் இடம்பெற்றுவருகின்றது.ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மன்னன் அராஜராஜசோழனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக தமிழக அரசினால் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இராஜராஜேஸ்வரம் எனப்படும் தஞ்சைப் பெருங் கோயிலை கட்டிய தமிழக மன்னன் இராஜராஜ சோழனின் 1032வது சதய விழா தஞ்சாவூரில் கோலகலமாகக் இடம்பெற்றுவருகின்றது.ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மன்னன் அராஜராஜசோழனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக தமிழக அரசினால் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டை பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்தாலும் இராஜராஜசோழ மன்னன் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அரசன் ஆவார். ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் இம் மன்னன் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளமையை சதய விழா காண்பிக்கின்றது.
இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் பொற் காலமாக கருதப்படுகிறது. தேர்தல் நடத்திய மன்னன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. குடவோலை தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி இன்றைய தேர்தலுக்கு அன்றே வித்திட்ட மன்னராக கருதப்படுகின்றார். நாவாய்(பாய்மர கப்பல்) ஓட்டி கடல் வணிகத்திலும் சிறந்து விளங்கியுள்ளமை புலப்படுகின்றது.
இது அன்றைய காலகட்டத்தில் அகில இந்திய அளவில் எந்த ஒரு மன்னரும் செய்யாத சாதனையாக கருதப்படுகின்றது. பிரகதீஷ்வரர் ஆலயம் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை ட்டிய மன்னன் ராஜராஜசோழன். ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கின்றது.
1032வது சதயவிழா நிகழ்ச்சி இந்த ஆண்டு 1032வது சதயவிழா இன்றும், நாளையும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதனால் நாளைய தினம் உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சதய விழாவை முன்னிட்டு தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. சதயவிழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெருவுடையார் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். ஓதுவார்கள் ஓத சிறப்பு ஆராதனை நடைபெற, விழா தொடங்கியுள்ளது.
கோயிலில் இருந்து வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து, ராஜராஜசோழன் சிலைக்கு, மாவட்ட செயலர் அண்ணாதுரை, பெரியகோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா பொன்ஸ்லே முதலியோர் மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதேவேளை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களின் சார்பிலும் இராஜராசோழ மன்னனுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
Spread the love