Home இலங்கைவடக்கில் தொடங்கியது பருவ மழை!

வடக்கில் தொடங்கியது பருவ மழை!

by admin

வரட்சியினால் வாடிய வடக்கில் இன்று அதிகாலை முதல் பருவமழை தொடங்கியுள்ளது. வரட்சி மற்றும் வெம்மையினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பருவம் பிந்தி மழை பெய்வதாகவும் போதிய மழை வீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் பயிர்களின் நிலை மேம்பாடு அடையும் என்றும் பருவ மழையை நம்பி நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.

மழை வீழ்ச்சியின்மையினால் கடந்த பல நாட்களாக பெரும்போகப் பயிர்கள் வாடிய நிலையில் காணப்பட்டன.  இந்த நிலையில் தற்போது ஆரம்பித்துள்ள மழையுடன் வாடிப் படும் பயிர்கள் தப்பிப் பிழைத்துள்ளன.

கடந்த காலத்தில் உரிய காலத்தில் மழை வீழ்ச்சி கிடைக்காமல் போவதுடன் அறுவடைக் காலத்தில் ஏற்படும் கடும் மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More