குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது, சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என கடந்த காலங்களில் திடமாக கூறியவர்களே இன்று புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டுமென கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரவில்லை எனவும், இது முழுக்க முழுக்க பிரிவினைவாதிகளின் நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள மக்கள் ஏனைய மத நம்பிக்கைகளை ஒருபோதும் எதிர்த்ததது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வடக்கில் 38 வீதமான தமிழர்களே வாழ்கின்றனர் எனவும்ஏனைய அனைத்து தமிழ் மக்களும் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.