154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. நிதிச் சலவைச் சட்டத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஸ மற்றும் அவரது நிறுவனப் பணிப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2013ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாமலின் நிறுவனம் நிதி சம்பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love