Home உலகம்பிரித்தானியாவில் அசிட் தாக்குதலிற்கு உள்ளான நபர் ஆபத்தான நிலையில்

பிரித்தானியாவில் அசிட் தாக்குதலிற்கு உள்ளான நபர் ஆபத்தான நிலையில்

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனந்தெரியாத இருவரினால் அசிட் தாக்குதலிற்கு உள்ளான நபர் கண்பார்வையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார் என பிரித்தானிய  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அசிட்வீச்சில் சிக்கிய நபரே இந்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.

உணவுவிநியோகத்தில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் மீது இருவர் அசி;ட்டை வீசிய பின்னர் அவரது மோட்டார்சைக்கிளை திருட முயன்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உணவுவிநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது  நெருங்கிய இருவர் அவர்மீது அசிட் வீச்சினை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் கிழக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருக்கின்றார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More