குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என அயர்லாந்து அமைச்சர் ஜோன் ஹலிகான் தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கு பயணம் செய்து சமாதான முனைப்புக்களை முன்னெடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தமது இந்த விருப்பம் தொடர்பில் வடகொரியாவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி ஜனநாயக வழியிலான தீர்வுத் திட்டங்களை ஆதரிப்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையிலும் தாம் இவ்வாறு சமாதான முனைப்புக்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சியின் மூலம் எதனையும் இழக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனுக்கான வடகொரிய தூதரகத்தின் ஊடாக தமது முயற்சி குறித்த வடகொரியாவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.