வியட்நாம் கடற்பகுதியில் ர். வியட்நாமின் தனாங் நகரில் எதிர்வரும் 10ம்திகதி ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு இடம்பெறவுள்ளது. இந்த மகாநாட்டில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு கடற்பகுதியில் நேற்று முன்தினம் உருவாகிய தாம்ரே புயல் வலுவடைந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அத்துடன் 90 கி.மீ வேகத்தில் வீசிவரும் காற்று காரனமாக ஆயிரக்காணக்கன வீடுகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்துள்ளதனால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாதரங் என்ற நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தென் சீனக்கடலில் 61 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல்கள் கவிழ்ந்ததில் 25 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை.
இதுவரை 19 பேர் புயலுக்கு பலியானதாகவும், 33 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வீசிய புயலில் 80 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A storm batters a street in Nha Trang, as Typhoon Damrey descends on southern Vietnam, in this still image taken from social media video, November 4, 2017. @SINITSYN_NIKITA/via REUTERS


