பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பாடசாலைகள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் கட்டட ஆய்வாளர் கிரிஷான் சன்னக சுகதபால அண்மையில் தமது நிலையம் மேற்கொண்ட ஆய்வின்போது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளர்h.
எனவே சம்பந்தப்பட்ட பாடசாலைக் கட்டடங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வது அவசியமென அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பதுளை மாவட்டத்தில் 29,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவற்றுள் 28,040 வீடுகள் 160 அரச நிறுவனங்கள் 691 வியாபார நிறுவனங்கள் மற்றும் 98 வழிபாட்டு கட்டடங்கள் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தநிலையில் இது குறித்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிபிசி செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த போது , சம்பந்தப்பட்ட பாடசாலைகள் தொடர்ப்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஆலோசனைகளைப் பெற்று விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.