Home பிரதான செய்திகள்பிரபல கால்பந்தாட்ட வீரர் அன்ட்ரியா பிர்லோ ஓய்வு

பிரபல கால்பந்தாட்ட வீரர் அன்ட்ரியா பிர்லோ ஓய்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல கால்பந்தாட்ட வீரர் அன்ட்ரியா பிர்லோ  (Andrea Pirlo )போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார். நியூயோர்க் சிட்டி கழகத்தின் சார்பில் விளையாடி வந்த  இத்தாலிய வீரரான அன்ட்ரியா  உலகக் கிண்ண வெற்றி அணி, சம்பியன்  லீக் வெற்றி அணி, சீரி ஏ கிண்ணப் போட்டித் தொடர் சம்பியன் அணி ஆகியவற்றில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் கொலம்பஸ் க்ரீவ் அணிக்கு எதிராக நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் நியூயோர்க் சிட்டி கழகத்தை அன்ட்ரியா பிரதிநிதித்துவம் செய்திருந்தார். இந்நிலையில் கால்பந்தாட்ட வீரர் என்ற வகையில் தாம் முன்னெடுத்த பயணத்தை இத்துடன் முடிவுறுத்திக் கொள்வதாக அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். தமது வளர்ச்சியில் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More