குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை ஜப்பானினால் முறியடிக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் ஏவுகணைகளை வானத்திலேயே சுட்டு வீழ்த்தக்கூடிய ஆற்றல் ஜப்பானுக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிடமிருந்து ஜப்பான் பாரியளவில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது ஜப்பானுக்கு பயணம் செய்துள்ள ஜனாதிபதி ட்ராம்ப் இந்தக் கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அண்மைய மாதங்களில் இரண்டு தடவைகள் வடகொரியா, ஜப்பானை கடந்து செல்லக்கூடிய வகையில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானுக்கும் தென்கொரியாவிற்கும் மிகவும் வலுவான ஆயுதங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ராம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜப்பான் தனது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கும் என ஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபே தெரிவித்துள்ளார்.