Home உலகம்பிரான்ஸில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு

பிரான்ஸில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரான்ஸின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஓன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை  பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கான விசேட படையணியினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஓன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட இரு சகோதரர்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பிரான்ஸில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 14 வயது சிறுவனுடன் தொடர்புவைத்திருந்த சுவிட்சர்லாந்து பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி;ப்பிட்ட இளைஞன் சில மாதங்களிற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட நிலையிலேயே தற்போது இந்த நபர் சுவிட்சர்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More