தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முறைப்பாடு செய்யவேண்டும் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை தங்கல்லை அங்குலுகொலபெலஸ்ச சிறைச்சாலை வளாகத்தை பார்வையிட சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்கு மேலும் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிலர் தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் இயலாமையை மறைத்துகொள்ள அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது பாவனைக்கு பொருத்தமில்லாத எரிபொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.
அர்ஜுன ரணதுங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கவே இந்த சூழ்ச்சி இடம்பெறுவதாக நேற்று விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டதால் அர்ஜுன ரனதுங்க அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமையானது பிழை என கூறியமைக்காக விஜேதாச ராஜபக் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முறைப்பாடு செய்யவேண்டும் , அல்லது அவர் கூறிய விடயங்களை வைத்து பொலிஸார் இதனை விசாரணை செய்யவேண்டும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.