Home இலங்கையாழில்.பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது :

யாழில்.பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல கொள்ளைகளுடன் தொடர்புபட்டவர் என தடயங்களை வைத்து மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் காவல்துறையினரால்  தேடப்பட்டு வந்த கொள்ளைக் கும்பலில் ஒருவரை மானிப்பாய் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.  ஏழாலை முனியப்பர் கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரையே காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் சந்தேநபர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே சந்தே நபரை ஏழாலை பகுதியில் வைத்து காவல்துறையினர்  பிடித்திருந்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வட்டுகோட்டை பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை அதே போல் சுன்னாகம் காவல்துறை பிரதேசத்திற்கு உள்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் நகைகள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை  மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More