166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து செய்யப்படும் என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாராளுமன்றில் நேற்றைய தினம் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இதனை அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி வரும் காலங்களில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மருத்துவ பட்டக் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love