நீட் பரீட்சைக்கு எதிராக வழக்கு தொடுதத் அரியலூர் அனிதாவின் ஊருக்கு 50 இலட்சம் ரூபாவை கல்விக்கான நிதி உதவியாக வழங்க உள்ளதாக தென்னிந்திய தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அனிதாவின் நினைவாகவே அவர் இந்த உதவியினை அறிவித்துள்ளார்.
விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் சில விளம்பரங்களை மட்டும் தேர்தெடுத்து நடித்து வருவதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி இப்போது அணில் குழுமத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளதாகவும் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக தனக்கு கிடைத்த தொகையில் ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து முன்னணி புள்ளிகளை எடுத்து மருத்துவராக விரும்பிய நிலையில் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment