Home உலகம்சுவீடன் வானொலியில் ஹக்கர்களினால் ஐ.எஸ் பிரச்சாரம்

சுவீடன் வானொலியில் ஹக்கர்களினால் ஐ.எஸ் பிரச்சாரம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுவீடன் நாட்டு வானொலிச் சேவை ஒன்றின் ஊடாக, இணைய ஹக்கர்கள் ஐ.எஸ் தீவிரவாதப் பிரச்சாரம் செய்துள்ளனர்.
சுவீடனின் வர்த்தக வானொலிச் சேவையான மிக்ஸ்மெகாபோல் வானொலிச் சேவையை ஹக்கர்கள் ஊடுறுவி ஐ.எஸ். தீவிரவாத பிரச்சார நிகழ்ச்சியை ஒலிபரப்புச் செய்துள்ளனர்.

வானொலிச் சேவையின் அலைவரிசையை ஹக்கர்கள் ஊடுறுவி, நிகழ்ச்சி ஒலிபரப்பியுள்ளதாக வானொலி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரச்சார நிகழ்ச்சி ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் ஐ.எஸ் தீவிரவாதத்தை போற்றும் வகையிலான பாடல்கள் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளன எனவும்  வானொலி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் இந்த வானொலிச் சேவையை சுமார் 1.4 மில்லியன் நேயர்கள் செவிமடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக  வானொலி நிர்வகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More