Home இலங்கைதமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் – மாற்று அணி உருவாகுமா?

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் – மாற்று அணி உருவாகுமா?

by editortamil

தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டமொன்று, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் பேரவையின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

குறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத் தலைவர்களான லக்ஷ்மன், வைத்தியர் வரதராஜன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், பொது அமைப்புக்களின் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைப்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More