Home உலகம்பங்களாதேசில் 30 இந்துக்களின் வீடுகள் தீ வைத்து எரிப்பு – ஒருவர் உயிரிழப்பு

பங்களாதேசில் 30 இந்துக்களின் வீடுகள் தீ வைத்து எரிப்பு – ஒருவர் உயிரிழப்பு

by admin

பங்களாதேசில்   இடம்பெற்ற கலவரங்களின் போது  30 இந்துக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தின் போது  ஒருவர்   காவல்துறையினரினால்  சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேசில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள நிலையில் அங்கு  அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.    இந்த நிலையில் நேற்றையதினம்  ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்தில்  சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்   திரண்டு வந்து  தாகுர்பரா கிராமத்தில்  போராட்டம் மேற்கொண்டதாகவும் இதன் போது எற்பட்ட வன்முறைகளின் போது இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த  குழு ஒன்று அமைக்கப்பட்டு  ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More