142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய அரசாங்கத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டே செயற்படுகின்றார் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரி, சுதந்திரக் கட்சியை ஒரு நாளும் காட்டிக்கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி எல்லா சந்தர்ப்பங்களிலும் சுதந்திரக் கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டே செயற்படுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரத்மலானை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love