181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் மூன்று மாவட்டங்களில் ரிஷாத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து போட்டி.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
உள்ளூராட்சி தேர்தலில் வடக்கில் 05 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகின்றது மன்னார் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் ரிஷாத் பதியூதீனுடன் இணைந்து போட்டியிட உள்ளோம். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட உள்ளது. அனைத்து சபைகளிலும் ஆசனங்களை பெறுவோம். அதற்கான பூரண வேலைத்திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். எமக்கான ஆதரவாளர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர். என தெரிவித்தார்.
Spread the love