குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரொமானிய ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆளும் சோசலிச ஜனநாயக கட்சியின் தலைவரான லிவூ டிராகேயா ( Liviu Dragnea ) என்பவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கப் பணத்தை கையாடுவதற்காக குற்றவாளிகள் குழுவொன்றை நிறுவியதாக குற்றம் சுமத்தப்பட்டு ரொமானிய வழக்குரைஞர்கள் அவர்மீது வழக்குத்; தொடர்ந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டில் லிவூ டிராகேயா திட்டமிட்ட அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட பல்வேறு தரப்பினை இணைத்துக் கொண்டு செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது