186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரான் ஈராக் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 540 ஆக உயர்வடைந்துள்ளது. நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஈரானிய மக்கள் உதவிகளை கோரி வருகின்றனர். கடுமையான குளிருனடான காலநிலையில் வெட்ட வெளியில் ஈரானியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நில நடுக்கத்தில் சுமார் 8000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாக ஈரானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Spread the love