பிரதான செய்திகள் விளையாட்டு

ஏ.ரீ.பீ டென்னிஸ் போட்டியில் நடால் அதிர்ச்சித் தோல்வி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக டென்னிஸ் தர வரிசையில் முதலாம் இடத்தை வகித்து வரும் ரபால் நடால், ஏ.ரீ.பீ டென்னிஸ் போட்டித் தொடரில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் எழாம் இடத்தை வகித்து வரும் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த டேவிட் கோலிபித்திடம், நடால் தோல்வியடைந்தார். 7-6 (7-5) 6-7 (4-7) 6-4 என்ற செற் கணக்கில் நடால் போராடி தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழங்காலில் உபாதையுடனேயே நடால் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிபித்துடன் இரண்டரை மணித்தியாலங்கள் மூன்று செற்கள் போராடி தோற்றமை அதிசயமான ஓர் விடயம் என நடால் தெரிவித்துள்ளார். மிகுந்த வலியுடன் இந்தப் போட்டியில் பங்கேற்றதாகவும், கடுமையாக போராடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.