188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரான் மற்றும் ஈராக்கில் இடம்பெற்ற நில அதிர்வினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கான இலங்கைத் தூதரகம் மற்றும் ஈராக்கிற்கான இலங்கைத் தூதரகம் ஆகியன சம்பவத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என அறிவித்துள்ளது.
உள்ளுர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த அனர்த்தம் தொடர்பில் தகவல்களை திரட்டி வருவதாகவும் தொடர்ந்தும் நிலைமைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love