Home இலங்கைவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை – மனித உரிமைகள் பேரவையில் அதிர்ப்த்தி:-

வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை – மனித உரிமைகள் பேரவையில் அதிர்ப்த்தி:-

by editortamil

வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை என மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை என மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வு நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் பேரவையின் உறுப்புநாடுகள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளன.

மறுசீரமைப்புக்கான கால வரையரையுடன் கூடிய செயற்திட்டத்திற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் காணாமல் போனோர் விவகாரத்தில் தீர்வுகாணப்பட வேண்டும் எனவும் நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலியுத்தியுள்ளன.

அத்துடன் காணிகளை விடுவித்தல், மற்றும் பொறுப்புக் கூறல் முறையை முன்னெடுக்க வேண்டும் எனவும்; குறித்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் விரைவில் நீதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அமர்வில் பேரவையின் உறுப்பு நாடுகளால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா  ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்ட்டார்

இதுவே எமது நல்லிணக்கப் பொறிமுறையின் முக்கிய அம்சமாகும். இதற்காக 140 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கத்துக்காகவே நாம் இம்முறை முதலீடு செய்திருக்கின்றோம். குறிப்பாக நீண்டகால சமாதானம், பாதுகாப்பு, உறுதித் தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்காக முயற்சிக்கின்றோம். இன்னும் செய்ய வேண்டியது பல இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். துரதிஷ்டவசமாக நாம் முன்னெடுக்கும் நல்லிணக்க செயற்பாடுகளின் செல்லுபடித்தன்மை சவாலுக்கு உட்படுகின்றது. நாம் மனித உரிமையையும் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்போது எதிர்தரப்புகள் சர்வதேச தலையீட்டை கோரி எம்மை எதிர்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More