Home இலங்கைஅர்ஜூன் அலோசியஸ் என்னிடம் உதவி கோரியிருந்தார் – தாயசிறி ஜயசேகர

அர்ஜூன் அலோசியஸ் என்னிடம் உதவி கோரியிருந்தார் – தாயசிறி ஜயசேகர

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் தம்மிடம் உதவி கோரியிருந்தார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தாயசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதற்கு உதவுமாறு தம்மிடம் அலோசியஸ் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் எந்தவொரு பிழையையும் செய்யவில்லை எனவும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மை விடுவிக்குமாறும் அர்ஜூன் அலோசியஸ் கோரியதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தாம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தாகத் தெரிவித்துள்ளார். கோப் குழு விசாரணைகளின் போதும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஸ்திரமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More