192
மொரோக்கோவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இன்று நடைபெற்ற உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிடி பொவலேம் என்ற கிராம மக்களுக்கு ஒரு அமைப்பின் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்ட போது அதனைப் பெறுவதற்காக அதிகளவானோர் கூடிய நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமையே மேற்படி தள்ளுமுள்ளு ஏற்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love