உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கார்லோ டேவ்ஸ்கியோ ( Carlo Tavecchio) பதவி விலகியுள்ளார். ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில் தகுதிச்சுற்றுப் போட்டிகளின் முடிவில் இத்தாலி அணி நேரடியாக தகுதி பெறவில்லை.
சுவீடன் அணியுடன் இடம்பெற்ற தகுதிகாண போட்டிகளில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சுவீடன் அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில் 1958-ம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது சுமார் 60 ஆண்டுகளில் இத்தாலி உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பதனையடுத்து அந்த அணியின் தலைவர் ஓய்வு பெற்றிருந்தார்.
இந்நிலையில் இன்று இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரான கார்லோ பதவி விலகியுள்ளார்.