தாஜ்மஹால் அருகே உள்ள வாகன நிறுத்தங்களை அகற்ற வேண்டும் எனவும் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி மறுத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் உச்சநீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தாஜ்மஹாலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் வாகன நிறுத்தங்களை அகற்றவேண்டும் என ஆக்ரா நகர நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதற்கெதிராக உத்தரப்பிரதேச மாநில அரசு மேல்முறையீடு செய்த நிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வாகனங்களுக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் நடந்து செல்லலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், வாகன நிறுத்தத்தை அகற்ற வேண்டும் எனவும் புதிய வாகன நிறுத்தங்கள் அமைக்க அனுமதி மறுப்பதாகவும் உத்தரவிட்டுள்ளனர்.