இந்தியா

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு – விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர்  உத்தரவிட்டதைத் தொடர்ந்து மேலூரில்   மேற்கொண்ட  வீதிமறியல்  மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.     மேலூர் பகுதி விவசாயிகள்   தமது பகுதிகளுக்கு  தண்ணீர் திறக்க வலியுறுத்தி இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க  தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

நூளை 21ம் திகதி முதல் ஏழு நாட்களுக்கு, திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி அளவும், பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர்  வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டதனையடுத்து   மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக   விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply