குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வார கால பாராளுமன்ற அமர்வுகளை ரத்து செய்துள்ளது. இரட்டைக் குடியுரிமை பிரச்சினை மற்றும் ஓரின திருமணங்கள் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இரண்டு சட்டங்களையும் சரியான முறையில் விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதேச்சாதிகார போக்கில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது குடியுரிமை பற்றிய விபரங்களை டிசம்பர் மாதம் 1ம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது அந்தக் காலக்கெடு டிசம்பர் மாதம் 5ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.