150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கலவரத்தை ஏற்படுத்துவோர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உண்டு என கலகொடத்தே பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தம்மிடம் உள்ள தகவல்களை வெளியிட்டால் பாரிய முரண்பாடுகள் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கிங்தொட்ட மற்றும் அலுத்கம சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் தம்மிடம் தகவல்கள் உண்டு என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர் ஆணைக்குழு நிறுவப்பட்டால் தம்மிடம் உள்ள விபரங்களை ஒப்படைக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
Spread the love