இலங்கை பிரதான செய்திகள்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்து, லாப நோக்கற்ற மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்து, லாப நோக்கமற்ற மருத்துவ கல்லூரியொன்று ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை கிரமமான அடிப்படையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வியை தொடரும் அனைவருக்கும் செலவிட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள அவர்  தனியார் கல்வியும் அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். லாப நோக்கற்ற நிறுவனங்களை ஆரம்பித்து அதன் ஊடாக உயர்கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என  லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.