Home இலங்கைஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை:-

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை:-

by editortamil


உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்தன. அதேவேளை இனத்துவ அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்பு அல்லது குறைப்பு தொடர்பாகவும் முரண்பாடுகள் நிலவி வந்தன. இந்த நிலையில் இன்று விதிக்கப்பட்டுள்ள தடை, இனி தொடரப் பொகும் நீதிமன்ற விசாரணைகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பில் தாக்கங்களை உண்டு பண்ணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More