158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனவாத பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சமூக ஊடக வலையமைப்புக்களில் இனவாத பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
கிங்தொட்டவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்தோர் என புகைப்படங்கள் சமூக ஊடக வலையமைப்பில் பிரசூரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இனவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love