402
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதிரடிப்படையின் பாதுகாப்பு இல்லாமல் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விவாதத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வர தயார் எனில் நாமும் தயார் என சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நான் சார்ந்த இனத்திற்கு எனது இனத்திற்கு உரிமை கிடைக்கும் வரை தீர்வு கிடைக்கும் வரை என்னை இலங்கையனாக அடையாளப்படுத்துவதை விட தமிழனாக அடையாளப்படுத்தவே விரும்புகிறேன். இலங்கையனாக அடையாள படுத்தினால் எமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போய் விடுமோ எனும் அச்சம் எனக்குள் இருக்கின்றது. அது என்னுடைய தனிப்பட்ட விடயம். இதுவரையில் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றியது கிடையாது. ஏனெனில் இந்த நிமிடம் வரை எனது இனத்திற்கான உரிமைகள் கிடைக்க பெறவில்லை. கடத்தப்பட்டவன் காணாமல் ஆக்கப்பட்டவனுக்கு தீர்வு கிடைத்த பின்னர் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட பின்னர் குறைந்த பட்சம் எமக்கு சமஸ்டி தீர்வு கிடைத்த பின்னர் நாங்கள் சந்தோசமாக தேசிய கொடியை ஏற்றுவோம்.
தேசிய கொடியை ஏற்ற மாட்டேன் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்த போது அந்த விடயம் பூதாகரமாக பார்க்கப்படவில்லை.
ஆனால் தற்போது வடமாகாண கல்வி அமைச்சர் க சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்க மறுத்த விடயத்தை பூதகரமாக்கு கின்றார்கள். அப்போது விநாயகமூர்த்தி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தமையால் , அதனை பெரிது படுத்தாதவர்கள் தற்போது சர்வேஸ்வரன் சார்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப். கூட்டமைப்பை விட்டு வெளியே போக போகின்றது என்றே அதனை பெரிது படுத்து கின்றார்கள் என தோணுகின்றது.
தேசிய கொடியை ஏற்றுவது ஏற்றாது விடுவது அவரவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது.அத்துடன் இடைக்கால வரைவில் எதுவும் இல்லை என கூறுபவர்கள் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ, சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.என்னை பொறுத்தவரையில் நான் சுமந்திரனை இரண்டாக பார்க்கிறேன். சட்டத்தரணியாக அவர் ஒரு திறமையானவர். அதேவேளை அரசியல் வாதியாக மிக மோசமானவர்.
அவருடன் நாம் பகிரங்க விவாதத்திற்கு தாயார். ஆனால் அவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு இல்லாமல் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பொது அரங்கில் விவாதத்திற்கு வந்தால் நாமும் விவாதத்திற்கு தயார் என தெரிவித்தார்.
Spread the love