Home இந்தியாஇந்திய அரசின் ரத்னா கப்பல் கடலில் மும்பையில் மூழ்கியது

இந்திய அரசின் ரத்னா கப்பல் கடலில் மும்பையில் மூழ்கியது

by admin

இந்தியாவின் மும்பை பகுதியில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. எனினும் கப்பலில் இருந்த  மாலுமிகள் பதினாறு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான ரத்னா என்ற கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கடலுக்கடியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கும் பணிகளுக்காக இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டது.

மும்பைக்கு மேற்கே நூறு கடல்மைல் தொலைவில் கடலில் 80 மீட்டர் ஆழங்கொண்ட பகுதியில் அந்தக் கப்பல் மூழ்கியுள்ளது. ஓட்டை காரணமாகவே தண்ணீர் உள்நுழைந்து கப்பல் மூழ்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கப்பலில் இருந்த மாலுமிகள் பதினாறு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம் கூறியது. 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரத்னா என்ற இந்தக் கப்பலானது 2,000 தொன் எடையும், 64 மீட்டர் நீளமும் கொண்டது என்றும் இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம் மேலும் தெரிவிக்கின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More