Home இலங்கைகோத்தாவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த நேரிடும் – முரத்தட்டுவே ஆனந்த தேரர்

கோத்தாவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த நேரிடும் – முரத்தட்டுவே ஆனந்த தேரர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த நேரிடும் என தாய்நாட்டை பாதுகாக்கும் இயக்கத்தின் உறுப்பினர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.  கொழும்பு அபயாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுதைய அரசாங்கம் பாரியளவில் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆட்சி நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளினால் நாடு அழிவுப்பாதை நோக்கி நகர்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்ஸக்களுடன் தொடர்புடைய எவராக இருந்தாலும்  இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகின்றது என  குறிப்பிட்டுள்ள  முரத்தட்டுவே ஆனந்த தேரர் கோதபாய ராஜபக்ஸ எந்த வகையிலும் குற்றவாளி கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More