Home இலங்கைதனு ராக்ஸ் குழுவின் வீடுடைத்த ஆவா குழுவை சேர்ந்தவர் கைது:

தனு ராக்ஸ் குழுவின் வீடுடைத்த ஆவா குழுவை சேர்ந்தவர் கைது:

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய்  காவல்நிலைய நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம். ஹகந்தவெல தெரிவித்துள்ளார்.  யாழ்.கொக்குவில் பொற்பதி பகுதியை சேர்ந்த அந்தோணி மேரிக்சன் ஜூட் (வயது 18) எனும் நபரே கோப்பாய்  காவல்துறையினரினால்  கைது செய்யப்பட்டு உள்ளார்.

அது தொடர்பில் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் ,

ஆவா குழுவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பற்றி தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளோம்.

காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் உணவகம் உடைக்கப்பட்டமை , முடமாவடி பகுதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமாக்கப்பட்டு வீடு உடைக்கப்பட்டமை , கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி உடைக்கப்பட்டமை மற்றும் ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்ற தனு ராக்ஸ் குழுவை சேர்ந்த மானிப்பாயில் வசிக்கும் தனுவின் வீட்டினை உடைத்தமை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இவர் நேரடியாக பங்கெடுத்துள்ளார் என்பதனை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு உள்ளோம்.

தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். இன்றைய தினம் கைது செய்த நபரை நாளை சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More