Home இலங்கைஅரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு, தமிழ்த் தலைமைகளும் உடந்தை – குமார் குணரத்னம்:-

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு, தமிழ்த் தலைமைகளும் உடந்தை – குமார் குணரத்னம்:-

by editortamil


தமிழ்த் தலைமைகளும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹற்றனில் இன்று (25.11.17) இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மைக் காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடு. அந்த வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவே பொறுப்பு கூறவேண்டும். காரணம் தேர்தல் சம்பந்தமாக முக்கிய முடிவுகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால் தேர்தல் தாமதம் ஏற்படுவதற்கும் அவரே பொறுப்பு கூற வேண்டுமாயினும், முழு பொறுப்பும் ஏற்க வேண்டியது அரசாங்கமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More