Home இலங்கைவடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறியது பருத்தித்துறை சாலை – குழப்பம்..

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறியது பருத்தித்துறை சாலை – குழப்பம்..

by admin

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி பருத்தித்துறை சாலை பேருந்து சேவையில் ஈடுபட்டதால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் இடமாற்றக்கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே இதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் அரச பேருந்து சேவைகள் வடக்கில் முற்றாக முடங்கியுள்ளன.

இதனால் யாழ். மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்க பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More