Home இலங்கை அரச பஸ் வடக்குத் தொழிற்சங்கம் வவுனியா நோக்கி பஸ் தொடரணி:-

அரச பஸ் வடக்குத் தொழிற்சங்கம் வவுனியா நோக்கி பஸ் தொடரணி:-

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் பேருந்துகளில் கறுத்தக் கொடி கட்டி வாகனத் தொடரணியாக வவுனியாவுக்கு புறப்பட்டுள்ளனர். வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் வவுனியாவுக்கு இன்று செல்கிறார். அவரை சந்திக்கே யாழ்ப்பாணத்திலிருந்த இந்த அணி வவுனியாவுக்குப் புறப்படுகிறது.

இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் இன்று புதன்கிழமை பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றன. வவுனியாவில் இடம்பெறும் பேச்சுக்களின் ஊடாக இன்றைய தினம் சாதகமன முடிவு எட்டப்படலாம் என வடபிராந்திய போக்குவரத்து சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More