இலங்கை பிரதான செய்திகள்

கோதபாயவை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதனை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி வரையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி கோதபாய மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

90 மில்லியன் ரூபா அரச பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  பெற்றோரான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரது நினைவுத் தூபிகளை புனரமைப்பதற்காக இந்த அரசாங்கப் பணத்தை ராஜபக்ஸ பயன்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.