199
4-வது நாளாக தொடர்ந்து ராமேசுவரத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளமையினால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தின் தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில், குறிப்பாக கடலோர மாவட்டகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறதெனவும் இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love