இந்தியா

குஜராத் தேர்தலில் மோடியும் ராகுலும் காரசார பிரசாரம்!

நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தவர்கள் வழிப்பறிக்கொள்ளையைப் பற்றிய சிந்தனையுடன் இருப்பார்கள் என குஜராத் பிரசாரத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை ராகுல்காந்தி, சரக்கு சேவை வரியைக் கப்பார்சிங் டேக்ஸ் என காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டது குறித்தும் விளக்கம் அளித்தார்.

இதற்குப் பதில் அளித்த மோடி, நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்தவர்கள் வழிப்பறிக் கொள்ளை பற்றிய சிந்தனையுடனேயே இருப்பார்கள் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்துவரும் ராகுல்காந்தி இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியையும் இந்திய அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

குஜராத்தில் 22ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, மக்களின் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பற்றி மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாஜக விடையளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply